பதவி நீடிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது – நாலக
ஜனாதிபதி பதவியில் நீடிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றில் இன்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய நெருக்கடியை ஜனாதிபதியால் தீர்க்க முடியாது. நாடாளுமன்றத்தில் எத்தனை பெரும்பான்மை என்று இன்னும் கூற முடியாது.
ஆனால், இவ்வளவு பெரிய நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் நம்பிக்கை முக்கியம். நம்பிக்கை இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.
அரசாங்கம் செய்வதை மக்கள் நம்பாத வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு மக்களின் ஆதரவைப் பெற மாட்டார்கள். எனவே நாம் பேசும் அனைத்து தீர்வுகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு ஒரு பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும்.
எனவே அந்த பெரிய மாற்றத்திற்கு ஜனாதிபதி ஒரு முக்கிய காரணியாக உள்ளார். எனவே அந்த காரணி இருக்கும் வரை நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியாது என்று நானும் கருதுகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.