பருத்தித்துறை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் விடுதலை
Nila
2 years ago

பருத்தித்துறை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ் வாரம் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள் 12 பேரும் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை அவர்களுடைய படகுகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.



