கொழும்பு நகரின் பிரதான வர்த்தக பொருளாக விறகுக் கட்டு

Kanimoli
2 years ago
கொழும்பு நகரின் பிரதான வர்த்தக பொருளாக விறகுக் கட்டு

 நாட்டில் கடும் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போதைய காலக்கட்டத்தில் கொழும்பு நகரின் பிரதான வர்த்தக பொருளாக விறகுக் கட்டு மாறியுள்ளது.

கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக மக்கள் விறகுகளை பயன் படுத்தி சமைக்கும் நிலைக்கு தள்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொழும்பு மாடி வீடு உள்ளிட்ட ஏனைய மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் 4 அல்லது 5 விறகுகள் அடங்கிய கட்டு ஒன்றானது 70 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில கிராம புறங்களில் வாழும் மக்கள் பாரவூர்திகள் மூலம் விறகுகளை கொழும்புக்கு கொண்டு வந்து, துண்டுகளாக்கி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகின்றது.

அதேவேளை முன்னர், சிறப்பு அங்காடிகளில் விறகுக் கட்டு ஒன்று 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் சந்தையில் மண் அடுப்புக்கான கேள்வி அதிகரித்துள்ளதுடன் மண் அடுப்பானது, சுமார் ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!