இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையின் விமானங்களுக்கு இந்தியாவில் எரிபொருள்!

Reha
2 years ago
இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில்,  இலங்கையின் விமானங்களுக்கு இந்தியாவில் எரிபொருள்!

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையின் ஸ்ரீலங்கன் விமானங்களுக்கு இந்தியாவில் எரிபொருள் நிரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசுக்கு சொந்தமான, பாரத் பெற்றோலியம், இலங்கையின் விமானங்களுக்கு எரிபொருட்களை நிரப்பி வருவதாக தமது டுவிட்டரில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி இலங்கையின் சுமார் 100 விமானங்களுக்கு இதுவரை, திருவனந்தபுரம், சென்னை மற்றும் கொச்சி விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது.

கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக, மிகக் குறுகிய அறிவிப்பில், இந்த எரிபொருள் நிரப்புதல் செய்யப்பட்டுள்ளது என்று பாரத் பெற்றோலியம் குறிப்பிட்டுள்ளது.

கடும் டொலர் நெருக்கடியின் மத்தியில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் கடந்த வாரம் அதன் ஊழியர்களுக்கு உள்ளக குறிப்பு ஒன்றை வழங்கியது, அதில் ஜூன் 29 அன்று விமான எரிபொருள் இருப்புக்கள் தீர்ந்துவிட்டதாக அறிவித்திருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!