இலங்கையில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை நாட்டை விட்டு வெளியேற தயாராகும் கோட்டாபய..?

Nila
2 years ago
இலங்கையில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை நாட்டை விட்டு வெளியேற தயாராகும் கோட்டாபய..?

நாளை நடைபெறவுள்ள பொதுமக்களின் எதிர்ப்புப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்த, நிலைமை கைமீறிப் போனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தப்பிச் செல்வதற்கு மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டிருக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தின் பல்வேறு கோப்புகள் வாகனங்கள் மூலமாக வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.  
 
போராட்டத்துக்கு பயந்து எடுத்துச் செல்கின்றார்களா? ஜனாதிபதி தப்பிச் செல்வதற்காக எடுத்துச் செல்கின்றார்களா என்று உறுதியாகத் தெரியவில்லை.  
 
இதற்கிடையே சிங்கப்பூர் வழியாக வேறொரு நாட்டுக்கு தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து இன்று பரீட்சார்த்த முயற்சியொன்றை ராஜபக்‌ஷ தரப்பு மேற்கொண்டுள்ளது. 
 
நாமல் ராஜபக்‌ஷவின் மனைவி லிமினி கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டும் வௌியேறி, சிங்கப்பூர் சென்ற விடயம் இன்னும் உள்நாட்டு ஊடகங்களுக்கு தகவல் கசியாத நிலையில் அது தான் சாத்தியமான வழியாக இருக்கும் என்று ராஜபக்‌ஷ தரப்பு நம்பத் தொடங்கியுள்ளது.
 
விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து பாதுகாப்பாக தப்பிச் செல்வதில் சில ஆபத்துக்கள் இருப்பதால் கடல்வழி பாதுகாப்பானது என்று சிலர் ஆலோசனை வழங்கியுள்ளனர். 
 
கடல்வழியாக மாலைதீவு அல்லது இந்தியா சென்று அங்கிருந்து இன்னொரு நாடு செல்வது அவர்களின் திட்டமாக உள்ளது.
 
இன்று நள்ளிரவு தொடக்கம் நாளை அதிகாலைக்குள் தான் தீர்க்கமான முடிவுகள் தெரிய வரும் என கூறப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!