ஹஜ் பயணிகளால் மீண்டும் களை கட்டிய மெக்கா
இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மெக்காவில் ஹஜ் புனித பயணத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் மெக்காவில் நேற்று தொடங்கிய ஹஜ் புனித பயண சடங்குகளில் பங்கேற்க 10 லட்சம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் மெக்கா களை கட்டியுள்ளது. அதேவேளை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், நோய்த்தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்றுள்ள 18 வயது முதல் 65 வயது வரை கொண்டவர்கள் மெக்காவில் அனுமதிக்கப்பட்டனர்.
வழக்கமாக மெக்காவில் புனித பயணத்தின்போது 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள். அவர்களுடன் ஒப்பிடுகையில் தற்போது புனித பயண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனாலும் கொரோனா குறைந்ததால் மெக்காவில் மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளது.
இதனால் நேற்று முதல் புனித பயணம் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.