எரிபொருள், எரிவாயு குறித்து ஜனாதிபதி விசேட அறிக்கை!
எரிபொருள், எரிவாயு மற்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் ஜூலை 12 முதல் தொடர்ச்சியாக கிடைக்கப்பெறவுள்ளதாக என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதன்படி, நீண்டகால மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முயற்சியின் பின்னர் நாடு தற்போது அதற்கான பலன்களை பெற்று வருவதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பல்வேறு அரச தலைவர்கள் ஊடாக தொலைபேசி மூலமாகவும் சில நாடுகளின் தூதுவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.