கோட்டா கோ கம போராட்டக்களத்தில் ஒன்றுகூடியுள்ள மக்கள்! பொலிஸார் குவிப்பு

Nila
2 years ago
கோட்டா கோ கம போராட்டக்களத்தில் ஒன்றுகூடியுள்ள மக்கள்! பொலிஸார் குவிப்பு

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு காலி முகத்திடலில் இரண்டு மாத காலத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்போது மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதன்படி, தற்சமயம் பல்லாயிரக்கணக்கான மக்கள் காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம போராட்டக் களத்தில் குழுமியிருகின்றனர்.

தொடர்ந்து அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் சுமை காரணமாக இலங்கை மக்கள் கடும் அதிருப்தி நிலையை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மக்கள் கடும் கொதிநிலையை அடைந்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்களை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கொழும்பு காலி முகத்திடலை நோக்கி பெருந்திரளான மக்கள் வருகைத் தருவதாகவும் தற்போதுவரை அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருப்பதாகவும் தெரியவருகின்றது.

அத்தோடு, அங்கு பெருந்திரளான பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!