பாடசாலைகளை திறப்பது தொடர்பான தீர்மானம் இன்று – கல்வி அமைச்சு
Prabha Praneetha
2 years ago
அடுத்த வாரம் பாடசாலைகளை திறப்பது தொடர்பான தீர்மானம் இன்று (சனிக்கிழமை ) அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு அமைச்சருடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில், எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பின்னர், எரிபொருள் தட்டுப்பாட்டினால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு பாடசாலைகளை திறக்க வேண்டாம் என அமைச்சு தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர் .
எனினும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆன்லைன் மூலம் கற்பித்தலை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.