இலங்கை ஆர்பாட்டங்கள் தொடர்பில் பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Nila
2 years ago
இலங்கை ஆர்பாட்டங்கள்  தொடர்பில் பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

அதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களும் , பாதுகாப்பு படையினரும் இந்த சந்தர்ப்பங்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹூல்டன் மற்றும் அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தாரிக் அஹமட் ஆகியோர் டுவிட்டர் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள உயர்ஸ்தானிகர் சாரா ஹூல்டன் ,

” இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை பிரித்தானிய அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அமைதியான ஆர்ப்பாட்டமும் , கருத்து சுதந்திரமும் இலங்கையின் ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது. ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!