கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்து
அமெரிக்காவில் 50 ஆண்டுகளாக அமலில் இருந்த கருக்கலைப்பு உரிமை சட்டத்தை சமீபத்தில் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி தெரிவித்தார்.
இந்நிலையில், கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
ஜோ பைடன் அங்கம் வகிக்கும் ஜனநாயக கட்சியில் உறுப்பினர்களின் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இந்த நிர்வாக உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
ஜோ பைடனின் இந்த நடவடிக்கைகள் கருக்கலைப்பு செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் அபராதங்களை தடுக்கும். ஆனால் கருக்கலைப்புக்கு தடை உள்ள மாகாணங்களில் இந்த நிர்வாக உத்தரவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.
இதையடுத்து கருக்கலைப்பு தடை அமலில் உள்ள மாகாணங்களில் பாராளுமன்றம் மூலம் அத்தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்தார்