மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாக புர்ஜ் கலிஃபாவில் லேசர் ஷோ
உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கும் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாகவும், மண் அழிவை தடுக்க உலகின் கவனத்தை ஈர்க்கவும் சிறப்பு லேசர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
2 நிமிட லேசர் ஷோவில் மண் அழிவு குறித்தும் அதை உடனே சரி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் சத்குரு பேசியுள்ள செய்தி மற்றும் அவருடைய 100 நாள் மோட்டார் சைக்கிள் பயண காட்சிகள், மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள
சர்வதேச தலைவர்கள், விஞ்ஞானிகள், பிரபலங்களின் காணொளிகளும் ஒளிபரப்பப்பட்டன. இது தொடர்பான நிகழ்ச்சியில் சத்குரு அவர்கள் ஆன்லைன் வாயிலாக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், "மண் வளத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொலைநோக்கும் பார்வையும், செயல்களும் பாராட்டுக்குரியதாக உள்ளது.
மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றிகள். சவாலான மோட்டர் சைக்கிள் பயணம் முடிந்துவிட்டது. ஆனால், உண்மையில் கடினமான வேலை இப்போது தான் தொடங்கியுள்ளது.