உக்ரைன் ராணுவத்தில் புதிதாக சேர்பவர்களுக்கு இங்கிலாந்து நாட்டில் பயிற்சி

Prasu
2 years ago
உக்ரைன் ராணுவத்தில் புதிதாக சேர்பவர்களுக்கு இங்கிலாந்து நாட்டில் பயிற்சி

புதிதாக ராணுவத்தில் சேர்ந்தவர்களுக்கு பிரபல நாட்டில் பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது.

ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 

இருப்பினும் உக்ரைன் விட்டுக் கொடுக்காமல் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பல மக்கள் தங்களுடைய தாய் நாட்டிற்காக ராணுவத்தில் சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக போர் புரிந்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு  போர் புரியும் முறை மற்றும் ஆயுதங்களை கையாளும் முறையும் தெரியவில்லை.

இதன் காரணமாக இங்கிலாந்து ராணுவத்தினர் உக்ரைன் ராணுவத்தினருக்கு பயிற்சி கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளனர். அதன்படி இங்கிலாந்துக்கு உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சில வீரர்கள் பயிற்சிக்காக சென்றுள்ளனர். 

இவர்களுக்கு அவசர காலங்களில் போர் நடந்தால் என்ன செய்ய வேண்டும், ஆயுதங்களை கையாளுதல், முதலுதவி கொடுத்தல் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். மேலும் இங்கிலாந்து 2.8 மில்லியன் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைன் நாட்டிற்கு வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது ராணுவ பயிற்சியும் வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!