தப்பியோடிய கோட்டபாய நெருக்கடியில் அமைச்சர்
இலங்கையில் சமகால அரசியல் பெரும் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களால் விரட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் தலைமறைவாகி உள்ளார்.
இந்நிலையில் பல அமைச்சர்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முடியாத நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.
பல அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள போதிலும், இந்த இராஜினாமாக்கள் சட்டரீதியாக நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தற்போது காணாமல் போயுள்ளதால், இராஜினாமாக்களை ஏற்க யாரும் இல்லாததே இதற்கான பிரதான காரணமாகும்.
அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, பந்துல குணவர்தன, மஹிந்த அமரவீர மற்றும் தம்மிக்க பெரேரா ஆகியோர் ஏற்கனவே தமது இராஜினாமா கடிதங்களை அறிவித்துள்ளனர்.
எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.