அலரி மாளிகையில் மடிக்கணனிகள்,கெமரா கொள்ளை - சுவர்களில் பெரிய துளைகள் ஏற்படுத்தப்பட்டு ஆவணங்கள் அழிப்பு
அலரி மாளிகையில் உள்ள ஊடகப்பிரிவில் இருந்த உபகரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
மடிக்கணனிகள்,கெமரா கொள்ளை
ஊடகப்பிரிவில் இருந்த இரண்டு மடிக்கணனிகள், வீடியோ கெமரா, கெமரா உபகரணங்கள் என்பன இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் அலரி மாளிகையில் குடியேறவில்லை.
பிரதமரின் ஊடகப்பிரிவின் ஒரு பகுதி மாத்திரம் அலரி மாளிகையில் ஏற்படுத்தப்பட்டது. கடந்த 9 ஆம் திகதி போராட்டகாரர்கள் அலரி மாளிகைக்கு நுழைந்ததன் பின்னர், இந்த பொருட்கள் காணாமல் போயுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.
மேலும் அலரி மாளிகையின் சுவர்களுக்கு இடையில் பெரிய துளைகள் போட்டப்பட்டுள்ளன. கதவுகள் உடைக்கப்பட்டு ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவுட் ஊடகப்பிரிவு முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.