தப்பியோடிய கோட்டாபயவிற்கு அதிகாரிகளால் நேர்ந்த கதி

Nila
2 years ago
தப்பியோடிய கோட்டாபயவிற்கு அதிகாரிகளால் நேர்ந்த கதி

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டிலேயே சிக்குண்டுள்ளார்,அவர் நாட்டிலிருந்து தப்பிவெளியேறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளை விமானநிலையத்தின் குடிவரவுபிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர் என உத்தியோகபூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள முன்னொருபோதும் இல்லாத பொருளதார நெருக்கடி காரணமாக உருவான பரந்துபட்ட ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து புதன்கிழமை பதவி விலகுவதாக அறிவித்துள்ள ஜனாதிபதி அமைதியான ஆட்சி மாற்றத்தினை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரின் இல்லத்தை ஆக்கிரமிப்பதற்கு சற்று முன்னர் ஜனாதிபதி துபாய்க்கு செல்ல முயன்றார்என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதிக்கு விடுபாட்டுரிமை உள்ள போதிலும் தான் தடுத்துவைக்கப்படுவதை தவிர்ப்பதற்காக பதவி விலகுவதற்கு முன்னர் அவர் வெளிநாட்டிற்கு செல்ல விரும்பினார்.

எனினும் விமானநிலையத்தின்பணியாளர்கள் அவரின் ஆவணங்களிற்கு அனுமதி வழங்குவதற்காக முக்கிய பிரமுகர்களிற்கான பகுதிக்கு செல்ல மறுத்தனர்.

விமானநிலையத்தின் ஏனைய அதிகாரிகள் பழிவாங்கலாம் என்ற அச்சம் காரணமாக ஜனாதிபதி விமானநிலையத்தின் சாதாரண பயணிகளிற்கான பகுதியை பயன்படுத்தமறுத்தார்.

அவர்களை துபாய்க்கு கொண்டுசென்றிருக்க கூடிய நான்கு விமானங்களை தவறவிட்ட பின்னர் ஜனாதிபதியும் மனைவியும் விமானநிலையத்திற்கு அருகில் உள்ள இராணுவமுகாமில் தங்கியிருந்தனர்.

இதேபோன்று விமானநிலைய குடிவரவுதுறை அதிகாரிகளின் எதிர்ப்பினால் ஜனாதிபதியின் இளைய சகோதரர் பசில் ராஜபக்சவும் இன்று எமிரேட்ஸ் விமானநிலையத்தில் துபாய் செல்ல முடியாத நிலையேற்பட்டது.

பசில் ராஜபக்ச வணிகப்பயணிகளிற்கான விசேட சலுiகைகளை பயன்படுத்த பசில் ராஜபக்ச முயன்றார் ஆனால் ஆவணங்களை துரிதமாக பரிசிலீக்கும் நடவடிக்கையிலிருந்து விலகுவதாக விமானநிலைய பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பசில்விமானநிலையத்தில் ஏறுவதற்கு பயணிகள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டனர் என விமானநிலைய அதிகாரியொருவர் ஏஏவ்பிக்கு தெரிவித்தார்.