ஜூன் மாதத்தில் 27,937 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்..
Nila
2 years ago
இவ்வருடம் ஜூன் மாதத்தில் 27,937 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 18,083 பேர் தாங்களாகவே வேலை வாய்ப்புகளை தேடிக்கொண்டதாகவும், 9,854 நபர்கள் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மூலம் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஜனவரி மற்றும் ஜூலை முதல் வாரத்திற்கு இடையில், 156,179 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
100,767 பேர் சொந்த வழிகளிலும் 55,411 பேர் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் மூலம் நாட்டை விட்டு வெளியேறினர்.
மேலும் குவைத்திற்கு 39,216 பேர், காட்டருக்கு 36,022 பேர், சவுதி அரேபியாவுக்கு 26,098 பேர், தென் கொரியாவுக்கு 3,219 பேர், ஜப்பானுக்கு 2,576 பேர் வேலைக்காகச் சென்றுள்ளனர்.