ரணிலின் வீட்டுக்குள்ளிருந்த புத்தகங்களும், பெறுமதியான பொருட்களும் எங்கே
பிரதமர் ரணிலின் வீடு தீவைக்கப்பட்டபோது வீட்டுக்குள்ளிருந்த புத்தகங்களும், பெறுமதியான பொருட்களும் காணாமல் போயுள்லதாக கூறப்படும் நிலையில் அது குறித்த தகவலொன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
1. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்குத் தீ வைக்கப்படுதல்
2. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ 13 ஆம் திகதி பதவி விலகக் காத்திருத்தல்.
இவை இரண்டுமே ஒன்று திரண்டுள்ள மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யவும், மக்களினதும், சர்வதேச ஊடகங்களினதும் கவனத்தைத் திசை திருப்பவும் தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக் கொள்ள அரசாங்கமே மேற்கொள்ளும் முயற்சிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கமானது, மக்களை இந்தப் போராட்டத்தில் வெல்ல ஒருபோதும் அனுமதிக்காது என்றும், இலங்கை வரலாற்றில் ஒரு தோல்விற்ற அரசாங்கமாக தான் குறிப்பிடப்படுவதை அது விரும்பாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இப்போதே, மக்கள் போராட்டத்தின் வெற்றியை மறந்து, அனைவரும் ரணிலின் வீடு தீயில் எரிந்தது பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் ராஜபக்ஷேக்களினதும், ரணிலினதும் தற்போதைய தேவையே மக்கள் பிரச்சனைகளை மறந்து இவற்றை பேசவேண்டும் என்பதுதான் எனவும் கூறப்படுகின்றது.
எனவே, தயவுசெய்து ரணில் , ராஜபக்ஷேக்களின் கூட்டு சதிகளைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள். அதேவேளை ளி ரணிலின் வீட்டுக்குள்ளிருந்த புத்தகங்களும், பெறுமதியான பொருட்களும் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்ட பின்பே வீடு எரியூட்டப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதோடு ரணிலின் வீட்டுக்குள்ளிருந்த புத்தகங்களும், பெறுமதியான பொருட்கள் பாதுக்காப்பாக எடுத்துவைக்கப்பட்ட புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.