ஒரு நபருக்காக 3 லட்சம் மக்களை தனிமைப்படுத்திய சீனா
#China
#Covid 19
Prasu
2 years ago
சீன நாட்டின் ஒரு நகரில் ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சுமார் 3.2 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
சீனாவில் தோன்றிய கொரோனா தற்போது உலக நாடுகளை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் அந்நாட்டில் இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் நகரம் முழுவதும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தி அனைத்து மக்களையும் அரசு பரிசோதிக்கிறது.
இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில், சீன நாட்டின் வுகேங்க் என்னும் நகரத்தில் ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். எனவே, சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் வாழும் அந்த நகருக்கு அரசாங்கம் ஊரடங்கு நடைமுறைப்படுத்தியுள்ளது. சீனாவின் மிகப்பெரிய உருக்கு ஆலை அந்த நகரத்தில் தான் இருக்கிறது. எனவே அதன் ஏற்றுமதி அதிகளவில் பாதிப்படையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.