குறைந்த விலையில் வெளிநாட்டு சுற்றுலா மேற்கொள்வதை அறிவித்த வியட்நாம் விமான நிறுவனம்
குறைந்த செலவில் வெளிநாட்டு சுற்றுலா பயணம் செல்ல விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது வெறும் 26 ரூபாய்க்கு விமான டிக்கெட் வாங்கி வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலா செல்லலாம்.
வியட்நாம் நாட்டை சேர்ந்த வியட்செட் நிறுவனம் 26 ரூபாயில் விமான டிக்கெட் வழங்குவதற்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி 26 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி சுற்றுலா செல்லலாம். இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து வியட்நாமை சேர்ந்த ஹனாய், ஹோ சி மின், ஃபூ குவோக் ஆகிய நகரங்களுக்கு வியட்ஜெட் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நகரங்களுக்கு டிக்கெட் பதிவு செய்து பயணிக்க முடியும். ஜூலை 7/7 தேதியை குறிக்கும் வகையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வியட்நாமுக்கு 777,777 விமானங்கள் இயக்கப்படுகிறது.
இந்த பயண காலம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது. எனவே அதன் பிறகு வரும் தேதிகளில் வியட்நாம் சுற்றுலாவுக்கு விமான டிக்கெட் பதிவு செய்து பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.