மாலைத்தீவில் இருந்து வேறு நாட்டிற்கு தலைமறைவாகும் கோத்தபாய!
பரவலான எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலக இருந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறினார்,
கோட்டபாய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி மற்றும் இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் இலங்கை விமானப்படை விமானத்தில் புறப்பட்டுச் சென்றதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தால் வெளியிடபட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாலத்தீவு தலைநகர் மாலே நகருக்கு அவர் புறப்பட்டுச் சென்றதாக அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி பெரும்பாலும் அங்கிருந்து வேறு ஆசிய நாட்டிற்குச் செல்வார் என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது.
பதவியில் இருக்கும் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறுவதை சட்டத்தின் கீழ் அதிகாரிகளால் தடுக்க முடியாது என்று குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோட்டபாய ராஜபக்ச பதவி நீக்கம் செய்யக்கோரி சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அவரது மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லங்களை முற்றுகையிட்டதை அடுத்து ஒரு ஐக்கிய அரசாங்கத்திற்கு வழி வகுக்கும் வகையில் இன்று ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டபாய ராஜபக்சே விலக இருந்தமை குறிப்பிடத்தக்கது.