பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை குறைக்க திட்டம்-கூகுள் நிறுவனம்
Prasu
2 years ago
கூகுள் நிறுவனம் இந்த வருடம் முழுக்க பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை குறைக்க தீர்மானித்திருக்கிறது.
பொருளாதாரம் மந்தமடையும் நிலை ஏற்பட்டிருப்பதால் இந்த வருடத்தில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை குறைப்பதற்கு கூகுள் நிறுவனம் தீர்மானித்து இருக்கிறது. இது பற்றி கூகுள் நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை தங்கள் நிறுவன பணியாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார்.
அதே சமயத்தில், மார்க்கெட்டிங் வணிகத்திற்கும் நிறுவனத்திற்காக லாபம் தரக்கூடிய முக்கிய துறைகளிலும் புதிதாக ஆயிரக்கணக்கான பணியாளர்களை கூகுள் நிறுவனம் சேர்த்திருக்கிறது. மேலும், இந்த வருடத்திலும் அடுத்த வருடத்திலும் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மற்ற முக்கிய வேலைகளுக்கு பணியாளர்களை அமர்த்த திட்டமிடப்பட்டிருப்பதாக சுந்தர் பிச்சை கூறி இருக்கிறார்.