காந்தி சிலையை சேதப் படுத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை
Kanimoli
2 years ago
கனடாவின் ரிச்மண்ட்ஹில் பகுதியில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இனம் தெரியாத நபர்களினால் காந்தி சிலை நிறுவப்பட்டுள்ள பகுதியில் இவ்வாறு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பெயர் பலகையின் மீது ஸ்பிரோ செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யோர்க் பிராந்தியத்தின் ரிச்மண்ட் ஹில் பகுதியின் யொங் வீதிக்கு அருகாமையில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கனடிய வாழ் இந்தியர்களை பெரிதும் பாதித்துள்ளதாகவும் இது ஒரு குரோத செயல் எனவும் டொரன்டோவிற்கான இந்திய கொன்சியூலர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப்பெற்றால் அறிவிக்குமாறு போலீசார் பொதுமக்களிடம் கூறியுள்ளனர்