இன்றைய வேத வசனம் 15.07.2022: ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 15.07.2022: ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்

ஸ்பெயின் தேசத்திலிருந்து, 7 மாதங்கள் கப்பல் பிரயாணம் பண்ணி தரங்கபாடி அருகில் வந்து சேர்ந்தார். ஆனால் தரையில் இறங்க அனுமதி கிடைக்கவில்லை.

அவரை ஒரு சிறு சிறைச்சாலையில் நான்கு மாதங்கள் பிரிட்டிஷ்காரர்கள் அடைத்து வைத்திருந்தார்கள். அவருக்கு வந்த சோதனைகள் கொஞ்சமல்ல.

மொழி தெரியாமல் தவித்தார். அன்று நம்முடைய துணைக்கண்டத்தில் கல்வி என்பது மத அடிப்படையில் உயர் சாதியினருக்கு மட்டுமே உரியதாக இருந்து. அவர் சிறுவர்களோடு தரையில் அமர்ந்து அ,ஆ,இ,ஈ என்று எழுதிப் படித்தார்.

அவரது கரம் தான் வேதத்தை முதல் முதலில் தமிழில் மொழிபெயர்த்தது..!
தினமும் வேதத்தை கையிலெடுக்கும் நாம் இதற்காக கொடுக்கப்பட்ட கிரயத்தை சிந்திக்கிறோமா?

சிலுவையில் தியாகமே முழுவதுமாக நிறைந்திருக்கிறது. அங்கு சுயநலத்திற்கு எவ்வளவும் இடமே இல்லை.
மனிதனிடம் சுயநலமே முழுவதும் நிறைந்து இருக்கிறது. அங்கு தியாகம் இல்லை.

ஆனால் மனிதன் சிலுவையண்டை வரும்போது, சிலுவை நாயகரை ஏறிட்டுப் பார்க்கும் போது, அவன் சுயநலங்கள் நீங்கி தியாக வாழ்க்கை அவன் உள்ளத்தில் ஆரம்பிக்கிறது.

ஆகவேதான் அப்போஸ்தலர் பவுல் சொல்லுகிறார்:-
கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; (2 கொரிந்தியர் 5:14)
இன்றும் நம்முடைய துணைக்கண்டத்தில் 800 மொழிகளில் வேதமில்லை. இன்றும் நம்முடைய துணைக்கண்டத்தில் பல பகுதிகளில் இயேசு என்றால் யார் என்றே தெரியாதவர்களும் இருக்கிறார்கள். 
நீங்கள் அதற்காக ஜெபிப்பீர்களா? அவர்களுக்கு கிறிஸ்து இயேசுவை அறிவிக்க முன் வருவீர்களா?கிறிஸ்துவின் அன்பு உங்களை நெருக்கி ஏவட்டும்! ஆமென்!!

எரேமியா 9:1
ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்;

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!