அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி காலமானார்!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால் ரம்ப்ட் அவர்களின் முதல் மனைவியான ஜவானா ரம்ப்ட் தனது 73வது வயதில் காலமானார்.
ஜவானா அவர்கள் முன்னாள் அதிபர் டொனால்ட் ரம்ப்ட் அவர்களின் முதல் மனைவி என்பதும், இவர்களின் திருமணம் 1977ம் ஆண்டு நடைபெற்று சுமார் 15வருட திருமண வாழ்வின் பின்னர் 1992ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விவாகரத்தின் பின்னர் முன்னாள் அதிபர் டொனால்ட் வேறு திருமணம் செய்து கொண்ட போதிலும் மறைந்த மனைவி ஜவானா, திருமணம் ஏதும் செய்து கொள்ளாமல் தனது வியாபார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு பிரபல்யமான நபராக வலம் வந்திருந்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
இவர்களுக்கு டொனால்ட் ஜீனியர், எரிக் மற்றும் இவன்கா என்ற மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முதல் மனைவி ஜவானாவின் பிரிவு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அதிபர் டொனால்ட் ரம்ப்ட், “ஜவானா மிகவும் சிறந்த பொறுப் புணர்ச்சி மிக்க பெண்மணி.
எனது மூன்று பிள்ளைகளுக்கும் ஒரு சிறந்த தாயாக இறுதி வரை தனது கடமையை நிறைவு செய்திருந்தாள். மிகவும் அழகான, அன்பான மனைவியும் கூட. அவளின் இழப்பு மிகவும் வருத்தமளிக்கின்றது. அவளின் ஆத்மா சாந்தியடைவதாக” என தெரிவித்திருந்தார்.