இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி பதவி விலகுவதாக அறிவிப்பு

#world_news #PrimeMinister #Resign
Nila
2 years ago
இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி பதவி விலகுவதாக அறிவிப்பு

இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த ஆண்டு ஜனாதிபதி செர்ஜியோ மெட்டரெல்லாவினால், மெரியோ ட்ராகி பிரதமராக நியமனம் செய்யப்பட்டார்.

இத்தாலியில் பொருளாதார நிலை தற்போது மிகவும் மோசடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கூட்டணி கட்சிகளால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில், மரியோ ட்ராகி பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், பிரதமரின் பதவி விலகலை ஏற்க ஜனாதிபதி மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!