உக்ரைனில் இருந்து வந்த அகதிக்காக மனைவியை கைவிட்ட கணவன்
உக்கிரனிலிருந்து அகதியாக வந்த பெண்ணுடன் காதல் ஏற்பட்டதில் தனது மனைவியும் இரண்டு மகள்களையும் கைவிட்டு விட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டார் கணவர்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் உக்ரைனிலிருந்து லட்சக்கணகானவர்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக குடியேறினர். உக்ரைனை சேர்ந்த சோபியா என்ற பெண் இங்கிலாந்து நாட்டிற்கு அகதியாக சென்றுள்ளார். இவருக்கு 22 வயதாகிறது. அவருக்கு பிராடுபோர்டில் வாழும் டோனி கார்நெட் அவரது மனைவியான லோர்னா தம்பதி தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார்கள். இந்நிலையில் சோபியாவுக்கும் டோனிக்கும் காதல் பற்றிக்கொண்டது. லோர்னா தட்டிக்கேட்க, இதுதான் வாய்ப்பு என மனைவியையும் இரண்டு மகள்களையும் கைவிட்டு விட்டு, சோபியாவுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் டோனி.
இந்த சம்பவம் குறித்து சோபியா கூறியதாவது, “டோனி லோர்னா தம்பதியர் பிரிந்ததற்கு தான் காரணம் அல்ல. நான் லோர்னாவுடன் நீண்ட நேரம் செலவிட்டேன். ஆனால், அவர் இரட்டை வேடம் போடுபவர். எப்போழுதும் சந்தேகத்துடனும் பதட்டத்துடனும் லோர்னா இருந்ததால்தான் நானும் டோனியும் நெருக்கமானோம். பின்பு எனக்கும் டோனிக்கும் இடையில் எதுவும் இல்லாதபோதே, ஏதோ இருப்பதாக லோர்னா கூறிக்கொண்டே இருந்தார். அதுதான் அவர் செய்த தவறு” என கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து லோர்னா கூறியதாவது, “நான் அவளுக்கு என் வீட்டில் இடமளித்தேன், ஆனால், அதற்கு பதிலாக அவள் இப்படி செய்வாள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதனால் எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் குறித்து சோபியா கவலைப்படவேயில்லை” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், டோனி தனக்கு அடிக்கடி குறுஞ்செய்திகள் அனுப்பி தொந்தரவு செய்வதாக லோர்னா நீதிமன்றத்தை நாடினார். இதனை தொடர்ந்து, தன் முன்னாள் மனைவியான லோர்னாவை டோனி நெருங்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், தம்பதியர் இருவரும் சேர்ந்து வாழ்ந்த பிராடுபோர்டில் வீடு அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் டோனி நுழையக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் லோர்னா இனி டோனியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடகூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கு சம்மதித்த லோர்னா முன் வெளியிட்ட செய்திகளையும் நீக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், டோனிக்கும் லோர்னாவுக்கும் பிறந்த பிள்ளைகள் இருவரின் நிலை என்ன என்று தெரியவில்லை.