ரணில் மூலம் பாதுகாப்புத் தேடும் பெரமுன

Kanimoli
2 years ago
ரணில் மூலம் பாதுகாப்புத் தேடும் பெரமுன

சிறிலங்காவின் தற்போதைய பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க குறைந்தது இரண்டு நாட்கள் என்றாலும் அதிபர் பதவிக்கு வரவேண்டும் என்ற சிறுப்பிள்ளை தனமான எதிர்ப்பார்ப்புடன் அதிபர் பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டுள்ளார் என சோசலிசக்கட்சியின் கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

முன்னிலை சோசலிசக்கட்சியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே சோசலிசக்கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட இவ்வாறு தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

பதில் அதிபர்  ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் காரணமாக நாடு சிவில் போர் ஒன்றை நோக்கி தள்ளப்படும் ஆபத்து இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஜூலை 15 ஆம் திகதி புதிய பதில் அதிபராக ரணில் விக்ரமசிங்க, கொழும்பு வாலுக்காரம விகாரையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இவ்வாறான நிலையில், அவர் செல்லும் பாதை எங்கு போய் முடியும் என்பதை இலங்கை மக்கள் முடிவு செய்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க செல்ல நினைக்கும் பாதை காலம் தாழ்ந்து விட்ட பாதை. எனினும் ரணில் தன்னை புதுப்பித்துக்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்யுள்ளார். 

அதேவேளை கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி ரணிலை அந்த இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய காலம் 83 ஆம் ஆண்டு போல் மக்களை கொன்ற காலம் எனவும், 88,89 ஆம் ஆண்டுகளில் பட்டலந்தை சித்திரவதை முகாமில் கொலை செய்த காலம் எனவும் நினைத்துக்கொண்டிருக்கின்றார்.

ஆனால், இது 2022 ஆம் ஆண்டில் இருக்கும் இலங்கை என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தள்ளார்.

இந்த காலத்தில் விளையாட முடியாது. அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட வேண்டும் என்ற விடயத்தை ரணில் விக்ரமசிஙக் முற்றாக மீறியுள்ளார். அவரை அதிபராக எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய அதிபரை தெரிவு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இவ்வாறான நிலையில், தமது பாதுகாப்புக்காக ரணிலை வைத்துக்கொள்ள வேண்டும் என்று பொதுஜன பெரமுன நினைத்துக்கொண்டிருக்கின்றது.

மக்கள் ஆணைக்கு தலைவணங்குவதன் மூலம் பாதுகாப்பு இருக்கும் என்பதை நாங்கள் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறி வைக்க விரும்புகிறோம்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் இணைக்கப்பாட்டுக்கு வந்தாலேயே பாதுகாப்பு இருக்கும். ரணில் அல்லது வேறு ஒருவரை கொண்டு 10,15 இராணுவத்தினரை அழைத்து அருகில் வைத்துக்கொள்வதால், பாதுகாப்பு கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.