உக்ரைன் டினிப்ரோ நகரம் மீது ரஷ்யா தாக்குதல்: 3 பேர் பலி- 15 பேர் காயம்

Prasu
2 years ago
உக்ரைன் டினிப்ரோ நகரம் மீது ரஷ்யா தாக்குதல்: 3 பேர் பலி- 15 பேர் காயம்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி 5 மாதத்தை நெருங்கினாலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷியாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. 

ஆனாலும் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்துப் போரிட்டு வருவதால் இன்னும் சில நகரங்களைப் பிடிக்க முடியாமல் ரஷியா திணறி வருகிறது. 

இந்நிலையில், உக்ரைனின் டினிப்ரோ நகரின் மீது நடந்த ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அப்பிராந்திய ஆளுநர் வாலன்டின் ரெனிசென்கோ கூறினார். 

இதுகுறித்து ஆளுநர் மேலும் கூறுகையில், " ஏவுகணைகள் டினிப்ரோ நகரில் உள்ள தொழில்துறை ஆலை மற்றும் அதற்கு அடுத்துள்ள பரபரப்பான தெரு மீது தாக்கியது. 

ரஷிய தாக்குதல் மூன்று பேரின் உயிரை பறித்தது. மேலும் 15 பேர் காயமடைந்தனர். அழிவின் அளவை நாங்கள் தீர்மானிக்கின்றோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!