பழங்குடியின மக்கள் மோதல்-31 பேர் பலி-39 பேர் படுகாயம்
பழங்குடியின மக்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஹவுஷா மற்றும் பெர்டி என்ற 2 பழங்குடியின மக்களுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இங்குள்ள அல்-டமாசின் மற்றும் அல்-ருஸ்ஸைர்ஸ் பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நேரத்தில், ஹவுஷா மற்றும் பெரடி பழங்குடியின மக்களுக்கு இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 16 கடைகள் சூறையாடப்பட்டதோடு, 31 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோதலில் 39 பேர் படு காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிலரை கைது செய்துள்ளனர். மேலும் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்தெல் பத்தா அல்-புர்ஹான் அவசரநிலை பிரகடனத்தை அறிவித்து அரசாங்கத்தை கலைத்ததில் இருந்து சூடானில் தொடர்ந்து அரசியல் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.