கோபத்தால் மனைவியை கொன்று வேக வைத்த கணவன் - பாகிஸ்தானில் சம்பவம்
#Pakistan
Prasu
2 years ago
பாகிஸ்தானில் உள்ள கராச்சி பகுதியை சேர்ந்தவர்கள் ஆஷிக், நர்கீஸ் தம்பதி. இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆஷிக், தனது மனைவியிடம் சண்டையிட்டு ஆத்திரத்தில் தலையணையை கொண்டு அவரை கொலை செய்துள்ளார்.
மேலும் அந்த சடலத்தை அவர் காவலராக பணியாற்றும் பள்ளியின் சமயலறையில் உள்ள ஒரு பானையில் போட்டு வேகவைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ந்து போன குழந்தைகள் செய்வதறியாது திகைத்த போது, ஒரு குழந்தை மட்டும் காவல்துறைக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள், ஆஷிக் தனது குழந்தைகளில் 3 பேரை அழைத்துக்கொண்டு தப்பிவிட்டார்.
இதையடுத்து பானைக்குள் இருந்த நர்கீஸின் உடலை கைப்பற்றிய போலீசார் சம்பவத்தை நேரில் பார்த்த குழந்தைகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.