ரூ.2,200 கோடி சம்பளத்தை நிராகரித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
Prasu
2 years ago
போர்ச்சுகலை சேர்ந்த உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ. விளையாட்டு உலகின் தலைவனாக திகழ்பவர் ரொனால்டோ. கால்பந்து போட்டியில் அதிக கோல்களை அடித்து சாதனை நாயகனாக திகழ்பவர்.
இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.2,200 கோடி சம்பளம் தரும் ஆஃபர்ரை வேண்டாம் என நிராகரித்துள்ளார் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ.அவரை தங்கள் அணியில் சேர்க்க சவுதியை சேர்ந்த ஒரு அணி இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முன்வந்துள்ளது.
ஆனால் சவுதிக்கு சென்றால் ஐரோப்பாவில் பெரிய போட்டியில் விளையாட முடியாமல் போகும் என்பதால் பணத்தை விட சாதனைகளை முக்கியமென ரொனால்டோ முடிவெடுத்துள்ளார். இவர் தற்போது மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஆடி வருகிறார்.