ஸ்பெயினில் கடும் வெப்ப அலை ஏற்பட்டதில் 84 நபர்கள் மரணம்
#France
#Death
Prasu
2 years ago
ஸ்பெயினில் தற்போது பல்வேறு இடங்களில் 40 டிகிரி செல்சியஸிற்கும் மேலாக வெப்பத்தின் தாக்கம் இருக்கிறது. இதனால் கடந்த 10-ம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரை 84 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வெப்பத்தின் தாக்கம் அடுத்த வாரத்திலும் இதே போன்று நீடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், உயிர்பலிகளும் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் இந்த வருடத்தில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய வெப்பலையாக இது இருக்கிறது. கடந்த மாதத்திலும் கடும் வெப்பத்தால் பல மக்கள் பலியானதாக கூறப்பட்டிருக்கிறது.