75 வருடங்கள் கழித்து பாகிஸ்தானில் உள்ள பூர்விக வீட்டிற்கு செல்லும் இந்திய மூதாட்டி

Prasu
2 years ago
75 வருடங்கள் கழித்து பாகிஸ்தானில் உள்ள பூர்விக வீட்டிற்கு செல்லும் இந்திய மூதாட்டி

இந்தியாவில் வாழ்ந்து வரும் பாகிஸ்தானை சேர்ந்த 92 வயதுடைய மூதாட்டி சொந்த நாட்டில் இருக்கும் பூர்வீக வீட்டிற்கு 75 வருடங்களுக்குப் பின் சென்றிருக்கிறார்.

இந்தியாவில் வாழும் 92 வயதுடைய ரீனா சிபார் என்ற மூதாட்டியின் பூர்வீக குடியிருப்பு பாகிஸ்தானில் இருக்கிறது. பாகிஸ்தான் தூதரகம் அந்த மூதாட்டிக்கு நல்லெண்ண அடிப்படையில் மூன்று மாதங்களுக்கான விசாவை அளித்திருக்கிறது. அதனைத்தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டின்

ராவல்பிந்தி என்னும் நகரத்தில் இருக்கும் தன் பூர்வீக குடியிருப்பிற்கு அந்த மூதாட்டி நேற்று சென்றுள்ளார். இவரின் குடும்பத்தினர் பாகிஸ்தான் நாட்டில் உள்ள ராவல்பிந்தி என்னும் நகரத்தில் வாழ்ந்து வந்தனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிந்த போது கடந்த 1947 ஆம் வருடத்தில் இவர் குடும்பத்தினருடன் இந்தியாவிற்கு வந்துவிட்டார்.

அப்போது, எனக்கு 15 வயது என்று கூறியுள்ளார். எனினும், பாகிஸ்தானில் பக்கத்து வீட்டுக்காரர்களும், என் தெருவில் வசித்தவர்களும் என் மனதில் இருந்து நீங்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார். இஸ்லாமியர்கள் உட்பட பல சமூகத்தை சேர்ந்த மக்களும் எங்கள் வீட்டில் வேலை செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!