ஐரோப்பா நாடுகளில் வெப்ப அலையால் பலி எண்ணிக்கை 1000 கடந்துள்ளது.
ஐரோப்பா நாடுகளில் வெப்ப அலை பரவி வரும் நிலையில் போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளிலும் வெப்ப அலையால் பலி எண்ணிக்கை 1000 கடந்துள்ளது.
கடந்த வாரம் போர்த்துக்கல்லில் மட்டும் 659 கும் கூடுதலானோர் உயிரிழந்துள்ளனர் என அந் நாட்டு பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் வியாழக்கிழமை 116.6 டிகிரி பேரன் ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளதோடு இது 2003 ஆம் ஆண்டு பதிவான உச்ச வெப்ப நிலையை விட சற்று குறைவாகும்.
இந்த தீவிர வெப்ப நிலை ஸ்பெயின், அண்டோரா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளிலும் பரவி பெருமளவிலான காட்டு தீயும் ஏற்பட்டுள்ளது. இதில் வியாழக்கிழமை மட்டுமே 440 பேர் உயிரிழந்துள்ளதோடு அடுத்த சில நாட்கள் இவ் எண்ணிக்கை உயர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் அண்டை நாடான ஸ்பெயினில் வெப்ப நிலையினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 368 ஆக உயர்ந்ததோடு இந் இரு நாடுகளிலும் சேர்த்து மொத்தம் 1027 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 60 வயதுடைய துப்பரவு பணியாளர் ஒருவர் மாட்ரிட் நகரில் பணியில் இருந்த போது வெப்பம் பொறுக்காமல் உயிரிழந்துள்ளார்.
அவசர கால ஊழியர்கள் உடனடியாக வந்து உடலை பார்த்த போது வெப்பநிலை 106.9 டிகிரி பேரன் ஹீட் ஆகா இருந்தது.
பிரான்ஸின் மேற்கு பகுதியில் 112.2 டிகிரி பேரன் ஹீட் வெப்பம் நேற்று பதிவான நிலையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் சில பகுதிகளில் வெப்பம் 104.2 டிகிரி பேரன் ஹீட்டை விட உயர்ந்து பதிவாகும் என அந் நாடு வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது பிரித்தானியாவில் இது வரை இல்லாத வெப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.