இன்றைய வேத வசனம் 20.07.2022: நான் கர்த்தரின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கண்டுபிடித்தேன்
நான் கர்த்தரின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கண்டுபிடித்தேன். 2 இராஜாக்கள் 22:8
ரேஷ்மாவின் கண்கள் ஒரு பழங்கால டிரஸ்ஸிங் டேபிளில் பதிய, அவள் அதை விருப்பத்துடன் வாங்கினாள். அதின் டிராயரைத் திறந்தபோது, அதில் ஒரு தங்க மோதிரமும், சில குடும்பப் புகைப்படங்களும், அதின் பின்னால் பெயர், இடம் மற்றும் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. மோதிரத்தை கண்டெடுத்த அவள், அதின் உரிமையாளரிடம் ஒப்படைக்க விரும்பினாள்.
புகைப்படத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் ஒருவரைக் கண்டுபிடிக்க எண்ணிய ரேஷ்மா, முகநூலைப் பயன்படுத்தினாள்.
உரிமையாளரைக் கண்டுபிடித்த, அவள் அந்த மோதிரத்தை திருப்பி ஒப்படைத்தபோது, அந்த மோதிரம் தனது குடும்பத்தின் பாரம்பரிய சொத்து என்றும், இழந்த மோதிரத்தைக் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் உரிமையாளர் கூறினார்.
2 இராஜாக்கள் 22:8இல், இல்க்கியா “கர்த்தருடைய ஆலயத்தில் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கண்டபோது” ஒரு அசாதாரணமான காரியத்தை கண்டுபிடித்தார் என்று வாசிக்கிறோம். “கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்காக” (வச. 5) ஜோசியா ராஜாவால் அறிவுறுத்தப்பட்டதால், அதை பழுதுபார்க்கும் முயற்சியில் அங்கிருந்த உபாகம புத்தகத்தைக் கண்டெடுத்தனர்.
“ராஜா நியாயப்பிரமாண புஸ்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது” அவர் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளானார் (வச. 11). யூதேயாவிலுள்ள திருச்சபையைப் போலவே, தேவனையும் அவர் அருளிய வேத வசனங்களைப் படிப்பதும் கீழ்ப்படிவதும் மக்களால் புறக்கணிக்கப்பட்டது.
மனந்திரும்பிய ராஜா, ஆலயத்திலிருந்த விக்கிரகங்களை அகற்றி, தன் தேசத்தை சீர்திருத்தத்திருக்கு வழிநடத்தினான் (23:1-24).
இன்று தேவனுடைய ஞானத்தையும் போதனையையும் வெளிப்படுத்தும், உபாகமம் புத்தகத்தையும் சேர்த்து 66 புத்தகங்கள் நமது வேதாகமத்தில் இடம்பெற்றுள்ளது.
அவற்றைப் படிக்கும்போதும், கேட்கும்போதும், பரிசுத்த ஆவியானவர் நம் மனதை மாற்றி, நம் வழிகளைச் சீர்திருத்துவார். இன்று வேதாகமத்தின் வாழ்க்கையை மாற்றும் கதையில் மூழ்கி, வாழ்நாள் முழுவதும் ஆராய்வதற்கான ஞானத்தைக் கண்டறிவோம்.