ஜஸ்டின் பைபரின் இசை நிகழ்ச்சி அக்டோபர் நடைபெறவுள்ளது
பிரபல பாப் இசை பாடகர் ஜஸ்டின் பைபர் (வயது 28) ஜஸ்டிஸ் உள்ளக சுற்றுலா என்ற பெயரில் பல்வேறு உலக நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு பாப் இசை கச்சேரிகளை நடத்தி வருபவர். உலகம் முழுவதும் இவருக்கு கோடி கனக்கான ரசிகர்கள் உள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் இவருக்கு பக்க வாதம் ஏற்பட்ட விடயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.இதனால் டொராண்டோவில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு முன்பே ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ஜஸ்டிஸ் உலக சுற்றுலாவானது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தனக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். அவருக்கு ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
இதனால், ஒரு காதின் பக்கத்தில் உள்ள முக நரம்பு பாதிக்கப்படும். இதனால், முகம் முடக்குவாதம் ஏற்படுவதுடன் கேட்கும் திறனையும் இழக்க கூடிய ஆபத்து உள்ளது
அந்த வீடியோவில் அவர், மிக முக்கியம். இந்த வீடியோவை காணுங்கள். ரசிகர்களாகிய உங்களை நான் விரும்புகிறேன். உங்களுடைய பிரார்த்தனையில் எனக்கும் இடம் கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இந்தியாவுக்கு வருகிற அக்டோபர் 18ந்தேதி வருகிறார். புதுடெல்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் அவர் இசை கச்சேரியை நடத்துகிறார். இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. ரூ.4 ஆயிரத்தில் இருந்து டிக்கெட் விலை தொடங்குகிறது.