சிலி நாட்டின் சிறிய நகரில் டைனோசர்களின் கால் தடங்கள் கண்டுபிடிப்பு
Prasu
2 years ago
சிலி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஹூடாகோண்டோ என்ற சிறிய நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டைனோசர்களின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிலி மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 5 பேர் கொண்ட வல்லுனர் குழு ஆய்வு மேற்கொண்டபோது 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் டைனோசர்களின் கால்தடங்களை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து ஆய்வாளர் கிறிஸ்டியன் சலாசர் கூறும்போது, இது தனது அனுபவத்தில் இதுவரை இல்லாத ஒன்று என்றும், 10 நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்தடங்களை கண்டுபிடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இது மிகப்பெரிய திட்டத்தின் தொடக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.