போரிலிருந்து தப்பி கனடாவிற்கு செல்ல முயன்ற போது இஸ்தான்புலுக்கு நாடு கடத்தப்பட்ட முதிய தம்பதி

Prasu
2 years ago
போரிலிருந்து தப்பி கனடாவிற்கு செல்ல முயன்ற போது இஸ்தான்புலுக்கு நாடு கடத்தப்பட்ட முதிய தம்பதி

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த Oksana Korolova-Leonid Korolev என்ற தம்பதி கனடா செல்ல விரும்பி உள்ளனர். ஏதென்சுக்கு சென்று அதன் பிறகு கனடா நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் அவர்கள் கனடா சென்றிருக்க வேண்டும். ஆனால், ரொறன்ரோ  மாகாணத்தில் காத்திருந்த உக்ரைன் நாட்டு அகதிகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் மற்றும் அந்த தம்பதியின் மகன் ஏமாற்றமடைந்தனர்.

எனவே, அவர்களை தொலைபேசியில் அழைத்துள்ளனர். அப்போது தான் அவர்கள் இஸ்தான்புல் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. அதாவது அந்த தம்பதி கனடாவிற்கு செல்லக்கூடிய ஒரு விமானத்தில் ஏறிய போது, அந்த விமான பணியாளர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை.

ஏனெனில் அவர்களிடம் ரஷ்ய கடவுச்சீட்டு தான் இருந்துள்ளது. மேலும், Leonid Korolev-யிடம்  கனடா நாட்டு தடுப்பூசிக்கான சான்றிதழ் இல்லை. எனவே, கணவர் இல்லாமல் Oksana Korolova மட்டும் தனியாக பயணிக்க விரும்பவில்லை. எனவே, அவர்கள் இஸ்தான்புல் நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டனர்.

ஆனால், உக்ரைன் அகதிகளுக்கு கனடா தடுப்பூசியிலிருந்து விலக்கு அளித்ததோடு, கடவுச்சீட்டும்  வழங்கி விட்டது. ஆனால் இந்த சலுகைகள் பற்றி அந்த விமான பணியாளர்கள்  தெரிந்திருக்கவில்லை. எனவே, விமானத்தில் அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் ஏதென்ஸ் நகரத்தை சேர்ந்த அதிகாரிகள், அவர்களை இஸ்தான்புல்-ற்கு நாடு கடத்தி விட்டனர். இதனால் தம்பதிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காத்திருந்த அவர்களின் மகன் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

அதன் பிறகு, உரிய விமானம் இதற்காக வருத்தம் தெரிவித்திருக்கிறது. ஆனால் இதனால் எந்த பலனும் கிடையாது. ஏதென்ஸ் நகரத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு விட்டால் இன்னும் ஆறு மாதங்கள் அந்த நகருக்கு செல்ல முடியாது. எனவே, இனிமேல் தம்பதி கனடா செல்ல வேண்டும் எனில், இஸ்தான்புல் நாட்டிலிருந்து ரொறன்ரோ மாகாணத்திற்கு செல்லும் விமானத்தில் தான் பயணிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!