காலநிலை மாற்றத்தால் அழியும் நிலையில் வன உயிர்கள் - ஆய்வில் அதிர்ச்சி
Prasu
2 years ago
ஆஸ்திரேலியா மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் விளைவால் ஒவ்வொரு நாளும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்படைந்து வருவதாக குறிப்பிட்டிருக்கிறது.
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் கொண்ட பகுதியாக அறியப்படும் ஆஸ்திரேலியாவில் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. சமீப காலமாக காலநிலை மாறுபாடு அதிகரித்து பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே வரலாறு காணாத வகையில் ஆஸ்திரேலியா பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், காலநிலை மாற்றம் காரணமாக உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கிறது. அழியும் நிலையில் இருக்கும் உயிரினங்களின் எண்ணிக்கை கடந்த 2016-ஆம் வருடத்திலிருந்து 8% உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.