ரஷ்யாவை பிரிக்க முடியாது” மேற்கத்திய நாடுகளின் முயற்சி வீண் - அதிபர் புதின்

#Russia #Putin
Prasu
2 years ago
ரஷ்யாவை பிரிக்க முடியாது” மேற்கத்திய நாடுகளின் முயற்சி வீண் - அதிபர் புதின்

ரஷ்யா-உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 -ம் தேதி போரை தொடங்கியது. இந்த போர் தற்போது வரை நீடித்து வரும் நிலையில், ஏராளமான மக்கள் போரினால் உயிரிழந்துள்ளனர். 

இந்தப் போரின் காரணமாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது ஏராளமான பொருளாதார தடையை விதித்துள்ளது. 

இந்நிலையில் போரின் காரணமாக உக்ரைன் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், சர்வதேச சந்தைகளில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இந்த உணவு நெருக்கடியை தீர்க்க வேண்டும் என்றால் ரஷ்யா மீதான பொருளாதார தடையை உடனடியாக நீக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். இவர் தற்போது ஈரான் மற்றும் துருக்கி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாடுகளின் அதிபர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதனையடுத்து ரஷ்ய அதிபர் புதிய செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், உக்ரைனில் உற்பத்தி செய்யப்படும் தானிய ஏற்றுமதிக்கு ரஷ்யா உதவும் என்றும், ரஷ்ய தானிய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் எனவும் கூறிநார். 

அதன் பிறகு சர்வதேச சந்தைகளுக்கு உரங்கள் வழங்குவதற்கு ரஷ்யா மீதான பொருளாதார தடை நீக்கப்பட்டுள்ளது. இதேபோன்று உணவு பொருட்கள் மீதான பொருளாதார தடையும் நீக்கப்பட வேண்டும். 

மேலும் சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியை மேற்கத்திய நாடுகள் நீக்க வேண்டும் என்று விரும்பினால், உடனடியாக ரஷ்யா மீதான பொருளாதார தடையை நீக்க வேண்டும். 

சர்வதேச நாடுகளில் இருந்து ரஷ்யாவை தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்தால் அது ஒருபோதும் நடக்காது எனவும் புதின் கூறியுள்ளார்.