பாதுகாப்பு அமைச்சுக்கு ஜனாதிபதி விஜயம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பதவிப்பிரமாண நிகழ்வைத் தொடர்ந்து இன்று கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்தார்.
அமைச்சுக்கு வருகை தந்த ஜனாதிபதியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வரவேற்றார்.
இன்று காலை ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அரச நிறுவனமொன்றுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி விக்ரமசிங்க, நாட்டின் பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்து சுருக்கமான கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார்.
அமைச்சர் திரான் அலஸ், சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி, அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.