உக்ரைன் மீதான போரில் 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு - அமெரிக்க உளவுத்துறை

#Russia #War #Death
Prasu
2 years ago
உக்ரைன் மீதான போரில் 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு - அமெரிக்க உளவுத்துறை

உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடங்கிய போர் 5-வது மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷியா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

இதில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரஷிய தாக்குதலில் உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் உக்ரைன் மீதான போரில் 15 ஆயிரம் ரஷிய வீரர்கள் பலியானதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அமெரிக்காவின் மத்திய உளவுத்துறை ஏஜென்சி இயக்குனர் வில்லியம் பர்னஸ் கூறியதாவது:- அமெரிக்க உளவுத்துறையின் சமீபத்திய தரவுகளின் படி, உக்ரைன் போரில் 15 ஆயிரம் ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

45 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். இது ஒரு குறிப்பிடத்தக்க இழப்பாகும். மேலும் உக்ரைனியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!