சாலை விபத்தை உண்டாக்கி 16 பேரை கொன்ற இந்தியருக்கு ஜாமீன்

Prasu
2 years ago
சாலை விபத்தை உண்டாக்கி 16 பேரை கொன்ற இந்தியருக்கு ஜாமீன்

கனடா நாட்டில் சில இளைஞர்களை பழி வாங்குவதற்காக சாலை விபத்தை உண்டாக்கிய இந்தியாவை சேர்ந்த நபருக்கு பகல் ஜாமீன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டில் Saskatchewan என்னும் நகரில் கடந்த 2018 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில்  இந்தியாவை சேர்ந்த Jaskirat Singh Sidhu என்ற நபர் தான் இயக்கி சென்ற ட்ரக்கை ஒரு பேருந்து மீது மோதியிருக்கிறார். இதில், அந்த பேருந்தில் இருந்த ஹாக்கி அணியை சேர்ந்த இளைஞர்கள் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 13 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. எனவே, Jaskirat Singh Sidhu-க்கு எட்டு வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், Jaskirat Singh Sidhu வேண்டுமென்றே  இவ்வாறு செய்ததாக ஒத்துக் கொண்டார். தண்டனையையும் ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில், The Parole Board of Canada அமைப்பு அவருக்கு ஆறு மாதங்கள் பகலில் மட்டும் வெளியில் செல்லக்கூடிய வகையிலான ஜாமினை அளித்திருக்கிறது. அதாவது அவர் இரவில் சிறைக்கு சென்று விட வேண்டும். சில கட்டுப்பாடுகளும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்கள் கழித்து அவர் முழு ஜாமின் பெற வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கனடாவில் பெடரல் சட்டப்படி, நிரந்தரமாக அந்நாட்டில் வாழ உரிமம் இருக்கும் ஒரு நபர் குற்ற செயலை மேற்கொண்டு பத்து வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால் தண்டனை காலம் முடிந்தவுடன் அவர் நாடு கடத்தப்பட வாய்ப்பிருக்கிறது. நாட்டின் எல்லை பாதுகாப்பு ஏஜென்சி அவரை புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் அமைப்பிடம் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு தான் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவாரா? என்பது குறித்து தீர்மானிக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!