வயதான பெண்மணி போல் வேடமணிந்து வங்கியில் கொள்ளையடித்த நபர்

Prasu
2 years ago
வயதான பெண்மணி போல் வேடமணிந்து வங்கியில் கொள்ளையடித்த நபர்

அமெரிக்க நாட்டில் ஒரு நபர் வயதான பெண்மணி போன்று வேடமணிந்து வங்கியில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்க நாட்டில் கருப்பினத்தை சேர்ந்த ஒரு நபர் முகக்கவசம், வெள்ளை நிற காலணிகள் மற்றும் மலர் ஆடை அணிந்து கொண்டு வயதான பெண்மணி போன்ற தோற்றத்துடன் McDonough நகரத்தின் Chase வங்கிக்குள் நுழைந்திருக்கிறார். அதன் பிறகு, அங்கிருந்த பணியாளரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து பணத்தை எடுத்து தன் பையில் போட்டுக்கொண்டு வாகனத்தில் தப்பி சென்றார். அந்த வாகனத்தில் பதிவு எண் இல்லை. தற்போது, காவல்துறையினர் மாறுவேடத்தில் இருக்கும் அந்த குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். 

தற்போது காவல்துறையினர் அந்த நபரை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!