ஜெர்மனிக்கு மீண்டும் எரிவாயு விநியோகம் தொடக்கம் - ரஷ்யா அறிவிப்பு

#Russia #Fuel
Prasu
2 years ago
ஜெர்மனிக்கு மீண்டும் எரிவாயு விநியோகம் தொடக்கம் - ரஷ்யா அறிவிப்பு

ரஷ்ய நாட்டின் எரிவாயு நிறுவனம் ஜெர்மன் நாட்டிற்கு அளித்த எரிவாயு விநியோகத்தை நிறுத்தியிருந்த நிலையில் மீண்டும் தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய நாட்டின் Gazprom என்ற எரிவாயு நிறுவனமானது, பத்து நாட்கள் கழித்து ஜெர்மன் நாட்டிற்கு Nord Stream 1 என்ற திட்டத்தின் படி மீண்டும் எரிவாயுவை விநியோகம் செய்ய தொடங்கி இருக்கிறது. அதாவது, ரஷ்ய நாட்டின் எரிவாயு நிறுவனம் கடந்த 11ஆம் தேதி அன்று ஜெர்மன் நாட்டிற்கு விநியோகித்து வந்து எரிவாயுவை திடீரென்று நிறுத்திக் கொண்டது.

வருடாந்திர பராமரிப்பு வேலைகள் நடக்கவுள்ளது. எனவே, எரிவாயு அளிப்பதை நிறுத்திக் கொண்டதாக அந்நிறுவனம் கூறியிருந்தது. ஆனால், ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்திருப்பதால் அந்நாட்டின் மீது தடைகள் விதிக்கப்பட்டதற்கு பழி வாங்க ரஷ்யா இவ்வாறு செய்ததாக கூறப்பட்டிருக்கிறது.

எனினும் தற்போது Gazprom  நிறுவனம் மீண்டும் குழாய் வழியாக எரிவாயு விநியோகத்தை இன்று காலையிலிருந்து தொடங்கியிருக்கிறது. எனினும் 30 சதவீத எரிவாயு தான் குழாய் வழியாக ஜெர்மன் நாட்டிற்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.