பெற்றோலை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது – எரிசக்தி அமைச்சர்
Mayoorikka
2 years ago
உலை எண்ணெய் மற்றும் பெற்றோலுடனான கப்பல் ஒன்று நேற்று (21) நாட்டை வந்தடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேற்படி உலை எண்ணெய் மின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதுடன், உரிய தரப் சோதனைகளின் பின்னர் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்
மேலும் தேசிய எரிபொருள் பாஸ் QR திட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 24ஆம் திகதி வரை கொழும்பின் பல இடங்களிலும் QR குறியீடு பரிசோதனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.