நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம்

Prabha Praneetha
2 years ago
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம்

எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் பல இடங்களில் எரிபொருள் விநியோகமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முல்லைத்தீவில் இரண்டு பிரதேச செயலகங்களில் உள்ள மூன்று லங்கா எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலை நேற்று  மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையில் பிரதேச செயலகத்தினர் கிராம அலுவலகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

கிராமங்கள் தோறும் கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோக அட்டையை பெற்றவர்களுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குடும்பம் ஒன்றிற்கு ஒரு பெட்ரோல் வாகனம், ஒரு டீசல் வாகனம் என்ற வீதம் எரிபொருள் விநியோக அட்டை வழங்கப்பட்டுள்ளது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!