கைது செய்யப்பட்டவர்களுக்காக 320 வழக்கறிஞர்கள் - 9 பேருக்கு பிணை

Prathees
2 years ago
கைது செய்யப்பட்டவர்களுக்காக 320 வழக்கறிஞர்கள் - 9 பேருக்கு பிணை

ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் 09 பேரை நேற்று இரவு கல்லுமுதூரை மைதானத்தில் வைத்து கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

சட்டத்தரணி நுவான் போபகே உள்ளிட்ட 9 சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த 09 பேர் சார்பாக கிட்டத்தட்ட 320 சட்டத்தரணிகள் தாமாக முன்வந்து நீதிமன்றத்திற்கு வந்தமை விசேட அம்சமாகும்.

 சந்தேகநபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், றியென்சி அர்சகுலரத்ன, உபுல் ஜயசிங்க மற்றும் சரத் ஜயமான்ன ஆகியோர் ஆஜராகியபோது, ​​மனிதாபிமானமற்ற தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.

சந்தேக நபர்களை பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதிலும், அது தொடர்பான ஆவணங்களை பொலிஸார் நீதிமன்றில் முன்வைக்கவில்லை.

இந்தப் போராட்டம் ஆரம்பம் முதலே அமைதிப் போராட்டமாக நடத்தப்பட்டதாக ஒப்புக்கொள்ளப்பட்டதாகக் கூறிய பதில் நீதவான், திடீரென இது எப்படி சட்டவிரோதமான கூட்டமாக மாறியது என பொலிஸாரிடம் கேள்வி எழுப்பினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!