உலகிலேயே மிகப் பெரிய பாண்டா கரடி கருணை கொலை செய்யப்பட்டது
Kanimoli
2 years ago
உலகிலேயே மிகப் பெரியதும் அதிக வயதை கொண்டதுமான அன் அன் என்று அழைக்கப்பட்ட பாண்டா கரடி கருணை கொலை செய்யப்பட்டது.
ஹாங்காங்கில் உள்ள பிரபல தீம் பார்க்கில் மனித பராமரிப்பில் வாழ்ந்து வந்த அன் அன் உலகிலேயே மிக அதிக வயதும், மிகப்பெரியதுமாகும்.
சீன அரசாங்கத்தால் ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்ட இந்த அன் அன் பாண்டா கரடி, வயது முதிர்வின் காரணமாக இயங்க முடியாமல் சிரமமடைந்து வந்தது.
ஒரு கட்டத்தில் உணவுகளை குறைத்து வந்த பாண்டா, இறுதியில் உணவு உண்பதை நிறுத்திக் கொண்ட நிலையில் அந்த பாண்டா கருணைக்கொலை செய்யப்பட்டது.
35 வயதான பாண்டாவை நினைவு கூரும் வகையில் பாண்டா வாழ்ந்து வந்த பார்க் பகுதியில் இரங்கல் அறை அமைக்கப்பட்டு, அதனை பார்வையாளர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.